புதிதாய் தொலைத்ததை தேடும் போது
என்றோ தொலைத்தது கிடைப்பது போல்
எனக்கு கிடைத்திருக்கிறாய் நீ…
நீ என்னை பார்த்து போன
நாட்கள் எல்லாம்
நடுப்பக்கத்தில் வைத்த மயிலறகாய் இருக்கிறது …
நாம் நடந்து செல்லும் போது
உனக்கு தெரியாமல்
மெதுவாய் திரும்பி பார்க்கிறேன்
நம் கால் தடங்களை ..
அருகருகே அழகாய் நிரம்பி இருக்கிறது காதல் …
நீ தான் என்று தெரிந்த பின்
நகரும் நாட்கள் எல்லாம்
ஒரு மதிய வெயிலில் தூறும் மழை போல் இருக்கிறது …
பழக்கம் இல்லை என்றாலும்
பழகியதால் பிடித்து விட்டது
சிறகில்லாமல் பறப்பதும்
நினைத்தவுடன் என்னருகில்
வந்து நீ சிரிப்பதும் …
பிடித்த வரிகள் இவை :
நீ தான் என்று தெரிந்த பின்
நகரும் நாட்கள் எல்லாம்
ஒரு மதிய வெயிலில் தூறும் மழை போல் இருக்கிறது …
நன்றி சிவா
:)