இன்று அது கண்டிப்பாக நிகழ்ந்திருக்கிறது…
எப்போதும் போல இல்லை நான்
ஏதோ ஒரு புது உற்சாகம்
ஒரு புது உணர்வு
ஐந்து ஆண்டு காத்திருப்பில்
இன்று அது கண்டிப்பாக நிகழ்ந்திருக்கிறது ..
அவரிடம் சொல்ல வேண்டும்
“உனக்கு நான் எனக்கு நீ” என்று அலுத்து போகாமல் சொன்னதால்
அத்தையிடம் சொல்ல வேண்டும்
இந்த நொடி வரை அவரின்
“வெருநிலம்” வசவு சுட்டுக் கொண்டே இருப்பதால் …
அம்மாவிடம் சொல்ல வேண்டும்
எனக்காக ஏதேதோ விரதமெல்லாம் இருந்தாள்..
கடவுளே மறந்தே விட்டேன்
முதலில் மும்மத கோயிலுக்கும் சென்று
முறையாக நன்றி சொல்லிவிட வேண்டும்
கோயிலுக்கு போய் விட்டு
உறுதி செய்ய செக்கப்பிற்கு போனேன்
சாதரணமாய் சொன்னார் டாக்டர்
“எப்பவும் போல தான் மா பித்தம்”
வெருநிலம் என்று உரக்க யாரோ கூப்பிடுவது போல் இருந்தது
வரும் வழியில் மீண்டும் “வெரும்”சாமியை
பார்த்து நன்றி சொல்லிவிட்டு வந்தேன்…
